Friday, June 29, 2007

தமிழிலிருந்து மொழி பெயர்க்க உதவி

தமிழிலிருந்து நேரடி மொழி பெயர்ப்புக்கு உதவும் வகையில் சில எளிய ஆனால் முக்கியமான வார்த்தைகளின் மொழியாக்கம் பார்க்கலாம்.

To - 'க்கு' என எடுத்துக்கொள்ளலாம்

எ.கா: To him - அவனு'க்கு' ; to school - பள்ளி'க்கு'; to eat; சாப்பிடுவதற்கு
I gave it to him - அதை அவனுக்கு கொடுத்தேன்
I am going to school - நான் பள்ளிக்கு போய்க்கொண்டிருக்கிறேன்
Let us meet to eat - சாப்பிடுவதற்கு சந்திப்போம்

for - காக

for her - அவளுக்'காக', for this - இதற்காக, for eating - சாப்பிடுவதற்காக
I sang for her - நான் அவளுக்காக பாடினேன்
I waited for this - நான் இதற்காக காத்திருந்தேன்.
This cake is for eating - இந்த கேக் சாப்பிடுவதற்காக - இந்த வகையில் for என்பதற்கு அடுத்துவர்ரும் வினைச் சொற்கள் ingயோடே வருகின்றன.

the - தெளிவாக குறிப்பிட்டுச் சொல்லும் ஒன்றை the என குறித்துச் சொல்லவேண்டும்.
The temple in Vadapalani. - வட பழனியில் இருக்கும் அந்தக் கோவில். வடபழனியில் பல கோவில்கள் இருக்கலாம் ஆனாலும் ஒரு குறிப்பிட்ட கோவிலைப் பற்றி பேசுகிறீர்கள். வடபழனியில் உள்ள ஏதாவது ஒரு கோவிலாஇ எனச் சொல்ல A பயன்படுத்துங்கள்.
He is getting married in a temple in Vadapalani - வடபழனியில் உள்ள (ஏதோ) ஒரு கோவிலில் அவன் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறான்.

He is getting married in the temple in Vadapalani - வடபழனியில் உள்ள அந்தக் கோவிலில் அவன் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறான்.

because (of) - ஏனெனில்; (ஒன்றின்) காரணமாக
ஒரு காரியத்தின் காரணத்தைச் சொல்கையில் because பயன்படுகிறது.
Because of poverty people are stealing. ஏழ்மையின் காரணமாய் மக்கள் திருடுகிறார்கள்.
He is angry because she dumped him. அவன் கோபமாயிருக்கிறான் ஏனெனில் அவள் அவனை நிராகரித்துவிட்டாள்.

ஒரு செயலின் காரணமாய் ஒரு ஆளோ, பொருளோ இருப்பின், அதாவது because என்பதற்குப்பின் ஒரு பெயர்ச்சொல்லை பயன்படுத்துவீர்களானால் of பயன்படுத்த வேண்டும்.
He is angry because of Raju.
I am late because of my wife.

of - உடைய (அவனுடைய, அவ்வளுடைய etc)
The book of Raju. ராஜுவுடைய புத்தகம்
The music of Rehman. ரஹ்மானுடைய இசை.
The star of the week. அந்த வாரத்தினுடைய நட்சத்திரம்

So - ஆதலால், எனவே, அதனால
I am sick so I am taking some rest - எனக்கு உடம்புக்கு முடியல ஆதலால்(எனவே) ஓய்வெடுக்கிறேன்
Raju worked hard so he won - கடினமாக உழைத்ததால் ராஜு வென்றான்
குறிப்பு: அதனால்தான் என்பதை so only என நேரடி மொழிபெயர்ப்பது வழக்கம். ஆனால் இது தவறானது. that's why பயன்படுத்தலாம். இதுகுறித்து பின்னர் பார்க்கலாம் (கொஞ்சம் ஆய்வு செய்யணும்)

with - உடன் (உடனடியாக என்பதல்ல)
I am going with Siva - நான் சிவாவுடன் போகிறேன்
She came with apples - அவள் ஆப்பிளுடன் வந்தாள்
Mary fought with Raju - மேரி ராஜுவுடன் சண்டையிட்டாள்.


this - இது
that - அது
here - இங்கே
there - அங்கே


13 comments:

said...

எளிய விளக்கங்கள். மிக அருமை. தொடரட்டும்.

said...

G.Ragavan said...
எளிய விளக்கங்கள். மிக அருமை. தொடரட்டும்.
//

reeppitteey

said...

அருமை, தொடரட்டும் உமது பணி

said...

நல்லது...அப்படியே பின் வரும் பதிவுகளில் ஒலிப்பதிவுகளும் இணைப்பீர்களா உச்சரிப்பிற்கு...

said...

சிறப்பா வந்திருக்கு. சில சந்தேகங்கள்:

The temple in Vadapalani. - வடபழனி கோவில் என்று சொன்னால் போதாதா?
He is getting married in the Vadapalani Temple.

---Because of poverty people are stealing.---

ஏழ்மையினால் திருடுகிறார்கள்? (- ஆல்)

ஸோ-வுக்கும் பிகாஸுக்கும் என்ன வித்தியாசம்.
(மைக்ரோசாஃப்ட் வோர்ட் வந்தபிறகு இலக்கணம் மறந்தே போச்சு)

said...

'So' leads to a conclusion
அது ஒரு முடிவைச் சொல்ல பயன்படுத்தப்படுகிறது.

'Because' offers an explanation.
விளக்கம் தருகிறது.

இது என்னுடைய புரிதலே.

said...

அருமையான முயற்சி. வாழ்த்துக்கள். வகுப்புக்கு வந்து விடுகிறேன், புக்கர் வாங்கணும் இல்லே :-)

said...

Thanks friends.

said...

சிறில் அண்ணேன்.. என்னை மாதிரி இங்கிலீபீஸை டர் டர்ராக்குறவுகளுக்கு இது தேவையான ஒண்ணுதான். நானும் கிளாஸ்ல ஒரு ஸ்டூடண்ட்தாண்ணேன்.. ஆனா அதுக்காக வீக்லி டெஸ்ட், மன்த்லி டெஸ்ட்டெல்லாம் வைச்சிராதீங்க.. ஆணி புடுங்குற வேலை நிறைய இருக்கு..

said...

பாபா,
நீங்க சொன்னபொன்னத்தான் யோசிச்சேன்.

Because and so மத்தியில ஒரு ஒப்புமை இருக்குது.

I am ill so i am resting.
I am resting because I am ill.
லாஜிக்கலா யோசிச்சா இரண்டுக்கும் உள்ள ஒத்துமை, வேறுபாடு புரியலாம்.

Anonymous said...

Thanks/

Anonymous said...

நன்று.

said...

அட! to-க்கும் for-க்கும் இருந்த வித்தியாசம் இப்போத்தான் தெரியுது. ஆனா, எனக்கென்னவோ தமிழர்களுக்கு இப்போது தமிழ் தான் கற்றுக்கொடுக்கவேண்டுமோ என்று?

//நல்லது...அப்படியே பின் வரும் பதிவுகளில் ஒலிப்பதிவுகளும் இணைப்பீர்களா உச்சரிப்பிற்கு...//

wikipedia-க்கு போனீங்கன்னா அங்கே இந்த வார்த்தைகளுக்கு phonetic கொடுத்திருப்பார்கள்.