Friday, June 29, 2007

பேசிக்கலி என்னண்ணா?

சிறு வயதுமுதல் ஆங்கிலப் பாடம் கற்றுவருவதால் நமக்கு ஆங்கிலம் பேசுவது பல நாட்டவர்களை விட எளிதாய் வரும். இதற்கு பெரிய எதிரியாய் இருப்பது தயக்கம். தவறு செய்வோமோ எனும் தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பது அவசியம். ஓரு தவறுமில்லாமல் ஆங்கிலம் பேசுபவர்கள் மிகக் குறைவே. எனவே தயக்கமில்லாமல் பேசவும். என் அனுபவத்தில் அமெரிக்கர்கள் பலரும் மிகையான தவறுகளுடனேயே பேசுகின்றனர். பேச்சுவழக்கில் அவை சரியானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதால் இது பிரச்சனையாக இல்லை. ஆங்கிலத்தில் தவறாய் பேசுவது பற்றிய கூச்சம் தமிழில் பேசுகையில் நமக்கு இருப்பதில்லை, எத்தனை தவறாய் பேசினாலும் (ஹி ஹி ஹி. இங்க வர்ற எழுத்துப் பிழைகளை பொறுத்தருள்க)

எளிதாய் துவங்க முதலில் தமிழிலிருந்து நேரடி மொழி பெயர்ப்பு செய்ய ஆரம்பியுங்கள்.

ஒருவரிடம் ஆங்கிலத்தில் பேச முனையுமுன் வாக்கியத்தை முழுமையாக தயார் செய்துவிட்டு பேசுங்கள்.

ஆங்கிலம் பேசுவது்து எளிது.

சில அடிப்படைகளை தெரிந்து வைப்பது நல்லது.

முதலில் ஆங்கிலத்தில் வாக்கியங்கள் மூன்று அடிப்படை பகுதிகளைக் கொண்டுள்ளது.

Subject
Verb
Object

Subject - யாரை அல்லது எதைப் பற்றி பேசுகிறோம். எதை முன்வைத்து/குறிப்பிட்டு பேசுகிறோம் தமிழில் பேசுபொருள் எனக் கொள்ளலாம்.
Verb - பேசுபொருள் எதைச் செய்துகொண்டிருக்கிறது எனும் செயலைக் குறிக்கும் சொல். இது அதன் நிலையையும்(Status/State) குறிக்கலாம். தமிழில் வினைச்சொல்.
Object - பேசுபொருள் அந்த செயலை எதனோடு/எதைக்கொண்டு செய்துகொண்டிருக்கிறது என்பதைஇ குறிக்கிறது.

இதுதான் ஒரு சாதாரண ஆங்கில வாக்கியத்தின் அடிப்படை.

உதாரணமாக
Raju eats bread - (ராஜு இட்லி சாப்பிடுகிறான்)
இதில்் Rajuவைப் பற்றி பேசுவதால் அவர் பேசுபொருள் Subject.
சாப்பிடுதல் வினைச்சொல் Verb (eats)
bread - object.

மேலுள்ள உதாரணத்தில் verb ஒரு செயலைக் குறிக்கிறது.

Raju is king.
இதில் is என்பது verb. அது ராஜுவின் நிலையை குறிக்கிறது. அவர் அரசராய் இருக்கிறார் என்பது தெளிவாகிறது. இவற்றை Be - verbs எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
be - இருப்பது
beings - இருப்பவை. ஒருவரின் இருப்பைச் சொல்லும் வினைச் சொற்கள் இவை.

Raju was king
They are students
They were students
He would be a student

இப்படி காலத்துக்கேற்ப (Tense), ஒருமை பன்மைக்கேற்ப இவை மாறும்.

பேசும்போது இந்த subject verb object ரூல் எல்லாம் பல சமயம் கடுமையாக கடைபிடிக்கத் தேவையில்லை. உதாரணமாய் ஒருவர் எங்கே போகிறாய் எனக் கேட்டால் 'கடைக்கு' என எளிதாய் சொல்லிவிடலாம்.

Where are you going?
To the store. இதில் வினைச் சொல், பேசுபொருள் எல்லாம் இல்லை.

கொஞ்சம் ஜம்ப் பண்ணிட்டேனா? கேள்விகளைத் தொடுங்கள் தொடருவோம்.

3 comments:

said...

ப்ரெட் டு இட்லி.. கலக்ஸ் :)

said...

//Raju eats bread - (ராஜு இட்லி சாப்பிடுகிறான்)//

Bread க்கு உங்க ஊரில் இட்லி என்று பெயரா ?

:)

Anonymous said...

ராஜு பொறை சாப்பிடுகிறான். :)

தாத்தா ஐ லவ் யூ!
இதை யாராவது தமிழில் மொழி பெர்யர்த்து உதவுங்கள்.