Tuesday, July 3, 2007

எளிய உரையாடல்கள் - அறிமுகங்கள்

சில எளிய உரையாடல்கள் எப்படி இருக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

அறிமுகம் செய்யும்போது:

1. வணக்கம் என தமிழில் சொல்வதுபோல Hi அல்லது hello பயன்படுத்தி ஒருவரை வரவேர்க்கலாம்.

2. காலத்துக்கேற்ப Good morning (காலை வணக்கம்), Good afternoon (மதிய வணக்கம்), Good evening போன்றவற்றைச் சொல்லலாம்.

3. Goodnight உறங்கப்போகுமுன் சொல்வது. ஒருவரை சாயுங்காலம் பார்த்துவிட்டு விடை பெறுகையில் இதைப் பயன்படுத்தலாம்.

4. How are you? ஒருவரை 'எப்டி இருக்கீங்க', 'நலமா' என விசாரிக்க. இதற்கு I am fine என்றோ, fine என்றோ, I am good அல்லது வெறுமனே good. என பதிலளிக்கலாம்.

5. முன்பு பார்த்த ஒருவரை மீண்டும் பார்க்கையில் How have you been? எனக் கேட்கலாம். (நாம் முன்பு சந்தித்ததுமுதல்) எப்படி இருந்து வந்திருக்கிறீர்கள் என அர்த்தம். இதற்கு I have been good/fine என பதிலளிக்கலாம்.

6. பொதுவாக உங்களை விசாரிப்பவர்களுக்கு நன்றி சொல்வது வழக்கம். எனவே.

How are you?
I am fine. Thank you.

என்பது வழக்கம்.

கூடவே மறு விசாரிப்பையும் சேர்க்கலாம்.
How are you?
I am fine. Thank you. How about you?

அல்லது.
How are you?
I am fine. Thank you. How are you?

7. உங்கள் நண்பர் ஒருவரை அறிமுகம் செய்ய.
Meet my friend Ram. (அல்லது)
This is my friend Ram.

8. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டவருக்கு Hi சொல்லிவிட்டு உங்களை அறிமுகம் செய்ய.

I am Cyril Alex. Nice to meet you.
அல்லது
Glad to meet you எனலாம்.

Nice meeting you என்பது விடைபெறுகையில் சொல்வது.

9. Nice to meet you என்பதற்கு
Pleasure is mine என்றோ
Nice to meet you too. என்றோ பதிலளிக்கலாம்.


ஒரு எளிய அறிமுக உரையாடல்.

A: Hi, Good Moring.
B: Hi.
A: How have you been?
B: Great. How about you?
A: Good.
B: Meet my friend Mahesh.
A: Hi Mahesh. How are you?
C: Fine. How about you?
A: Good. Nice to meet you.
C: Pleasure is mine.

5 comments:

said...

ஒருவரை முதன் முதலாக பார்க்கும்போது, குட் மார்னிங் சொல்ல வேண்டும் என்பார்கள். இரவில் பார்த்தால் கூட (லண்டன் இங்கிலிஷ்படி ;)

said...

//Boston Bala said...

ஒருவரை முதன் முதலாக பார்க்கும்போது, குட் மார்னிங் சொல்ல வேண்டும் என்பார்கள். இரவில் பார்த்தால் கூட (லண்டன் இங்கிலிஷ்படி ;)//

இது சரியான கப்ஸா :) இரவில் பார்த்தால் குட் மார்னிங் எல்லாம் சொல்ல வேண்டாம். மாறாக, சொல்ல வேண்டிய வாழ்த்து: குட் ஈவினிங். இரவு 10 மணிக்கு மேல் ஒருவரைச் சந்தித்தாலும், அப்போதும் குட் ஈவினிங்தான். விடை பெறும்போது மட்டுமே 'குட் நைட்' என்று கூறி விடை பெறலாம். இது லண்டன் / இந்தியா எல்லா வகையான ஆங்கிலத்திற்கும் பொருந்தும்.

said...

சிறில்,

// This is my friend Ram. //

இது சரியா? இதில் எனக்கு எப்போதும் குழ்ப்பம் உண்டு.

இது இப்படி இருக்கலாமா?

He is my friend Ram!

தருமி அய்யா (அ) அங்கில வாத்தியார்கள் சொன்ன நல்லாயொருக்கும்!

said...

Voice on Wings... நன்றி

said...

இப்போ இத்தெல்லாம் ஆரு பேசுறாங்க எடுத்தாப்பிலயே டேய், மச்சான், மச்சின்னு தான கலாய்க்கிறானுவோ. இன்னும் நிறைய சொல்லிக் குடு நைனா. ஷோக்காகீது.