Friday, June 29, 2007

தமிழிலிருந்து மொழி பெயர்க்க உதவி

தமிழிலிருந்து நேரடி மொழி பெயர்ப்புக்கு உதவும் வகையில் சில எளிய ஆனால் முக்கியமான வார்த்தைகளின் மொழியாக்கம் பார்க்கலாம்.

To - 'க்கு' என எடுத்துக்கொள்ளலாம்

எ.கா: To him - அவனு'க்கு' ; to school - பள்ளி'க்கு'; to eat; சாப்பிடுவதற்கு
I gave it to him - அதை அவனுக்கு கொடுத்தேன்
I am going to school - நான் பள்ளிக்கு போய்க்கொண்டிருக்கிறேன்
Let us meet to eat - சாப்பிடுவதற்கு சந்திப்போம்

for - காக

for her - அவளுக்'காக', for this - இதற்காக, for eating - சாப்பிடுவதற்காக
I sang for her - நான் அவளுக்காக பாடினேன்
I waited for this - நான் இதற்காக காத்திருந்தேன்.
This cake is for eating - இந்த கேக் சாப்பிடுவதற்காக - இந்த வகையில் for என்பதற்கு அடுத்துவர்ரும் வினைச் சொற்கள் ingயோடே வருகின்றன.

the - தெளிவாக குறிப்பிட்டுச் சொல்லும் ஒன்றை the என குறித்துச் சொல்லவேண்டும்.
The temple in Vadapalani. - வட பழனியில் இருக்கும் அந்தக் கோவில். வடபழனியில் பல கோவில்கள் இருக்கலாம் ஆனாலும் ஒரு குறிப்பிட்ட கோவிலைப் பற்றி பேசுகிறீர்கள். வடபழனியில் உள்ள ஏதாவது ஒரு கோவிலாஇ எனச் சொல்ல A பயன்படுத்துங்கள்.
He is getting married in a temple in Vadapalani - வடபழனியில் உள்ள (ஏதோ) ஒரு கோவிலில் அவன் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறான்.

He is getting married in the temple in Vadapalani - வடபழனியில் உள்ள அந்தக் கோவிலில் அவன் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறான்.

because (of) - ஏனெனில்; (ஒன்றின்) காரணமாக
ஒரு காரியத்தின் காரணத்தைச் சொல்கையில் because பயன்படுகிறது.
Because of poverty people are stealing. ஏழ்மையின் காரணமாய் மக்கள் திருடுகிறார்கள்.
He is angry because she dumped him. அவன் கோபமாயிருக்கிறான் ஏனெனில் அவள் அவனை நிராகரித்துவிட்டாள்.

ஒரு செயலின் காரணமாய் ஒரு ஆளோ, பொருளோ இருப்பின், அதாவது because என்பதற்குப்பின் ஒரு பெயர்ச்சொல்லை பயன்படுத்துவீர்களானால் of பயன்படுத்த வேண்டும்.
He is angry because of Raju.
I am late because of my wife.

of - உடைய (அவனுடைய, அவ்வளுடைய etc)
The book of Raju. ராஜுவுடைய புத்தகம்
The music of Rehman. ரஹ்மானுடைய இசை.
The star of the week. அந்த வாரத்தினுடைய நட்சத்திரம்

So - ஆதலால், எனவே, அதனால
I am sick so I am taking some rest - எனக்கு உடம்புக்கு முடியல ஆதலால்(எனவே) ஓய்வெடுக்கிறேன்
Raju worked hard so he won - கடினமாக உழைத்ததால் ராஜு வென்றான்
குறிப்பு: அதனால்தான் என்பதை so only என நேரடி மொழிபெயர்ப்பது வழக்கம். ஆனால் இது தவறானது. that's why பயன்படுத்தலாம். இதுகுறித்து பின்னர் பார்க்கலாம் (கொஞ்சம் ஆய்வு செய்யணும்)

with - உடன் (உடனடியாக என்பதல்ல)
I am going with Siva - நான் சிவாவுடன் போகிறேன்
She came with apples - அவள் ஆப்பிளுடன் வந்தாள்
Mary fought with Raju - மேரி ராஜுவுடன் சண்டையிட்டாள்.


this - இது
that - அது
here - இங்கே
there - அங்கே


பேசிக்கலி என்னண்ணா?

சிறு வயதுமுதல் ஆங்கிலப் பாடம் கற்றுவருவதால் நமக்கு ஆங்கிலம் பேசுவது பல நாட்டவர்களை விட எளிதாய் வரும். இதற்கு பெரிய எதிரியாய் இருப்பது தயக்கம். தவறு செய்வோமோ எனும் தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பது அவசியம். ஓரு தவறுமில்லாமல் ஆங்கிலம் பேசுபவர்கள் மிகக் குறைவே. எனவே தயக்கமில்லாமல் பேசவும். என் அனுபவத்தில் அமெரிக்கர்கள் பலரும் மிகையான தவறுகளுடனேயே பேசுகின்றனர். பேச்சுவழக்கில் அவை சரியானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதால் இது பிரச்சனையாக இல்லை. ஆங்கிலத்தில் தவறாய் பேசுவது பற்றிய கூச்சம் தமிழில் பேசுகையில் நமக்கு இருப்பதில்லை, எத்தனை தவறாய் பேசினாலும் (ஹி ஹி ஹி. இங்க வர்ற எழுத்துப் பிழைகளை பொறுத்தருள்க)

எளிதாய் துவங்க முதலில் தமிழிலிருந்து நேரடி மொழி பெயர்ப்பு செய்ய ஆரம்பியுங்கள்.

ஒருவரிடம் ஆங்கிலத்தில் பேச முனையுமுன் வாக்கியத்தை முழுமையாக தயார் செய்துவிட்டு பேசுங்கள்.

ஆங்கிலம் பேசுவது்து எளிது.

சில அடிப்படைகளை தெரிந்து வைப்பது நல்லது.

முதலில் ஆங்கிலத்தில் வாக்கியங்கள் மூன்று அடிப்படை பகுதிகளைக் கொண்டுள்ளது.

Subject
Verb
Object

Subject - யாரை அல்லது எதைப் பற்றி பேசுகிறோம். எதை முன்வைத்து/குறிப்பிட்டு பேசுகிறோம் தமிழில் பேசுபொருள் எனக் கொள்ளலாம்.
Verb - பேசுபொருள் எதைச் செய்துகொண்டிருக்கிறது எனும் செயலைக் குறிக்கும் சொல். இது அதன் நிலையையும்(Status/State) குறிக்கலாம். தமிழில் வினைச்சொல்.
Object - பேசுபொருள் அந்த செயலை எதனோடு/எதைக்கொண்டு செய்துகொண்டிருக்கிறது என்பதைஇ குறிக்கிறது.

இதுதான் ஒரு சாதாரண ஆங்கில வாக்கியத்தின் அடிப்படை.

உதாரணமாக
Raju eats bread - (ராஜு இட்லி சாப்பிடுகிறான்)
இதில்் Rajuவைப் பற்றி பேசுவதால் அவர் பேசுபொருள் Subject.
சாப்பிடுதல் வினைச்சொல் Verb (eats)
bread - object.

மேலுள்ள உதாரணத்தில் verb ஒரு செயலைக் குறிக்கிறது.

Raju is king.
இதில் is என்பது verb. அது ராஜுவின் நிலையை குறிக்கிறது. அவர் அரசராய் இருக்கிறார் என்பது தெளிவாகிறது. இவற்றை Be - verbs எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
be - இருப்பது
beings - இருப்பவை. ஒருவரின் இருப்பைச் சொல்லும் வினைச் சொற்கள் இவை.

Raju was king
They are students
They were students
He would be a student

இப்படி காலத்துக்கேற்ப (Tense), ஒருமை பன்மைக்கேற்ப இவை மாறும்.

பேசும்போது இந்த subject verb object ரூல் எல்லாம் பல சமயம் கடுமையாக கடைபிடிக்கத் தேவையில்லை. உதாரணமாய் ஒருவர் எங்கே போகிறாய் எனக் கேட்டால் 'கடைக்கு' என எளிதாய் சொல்லிவிடலாம்.

Where are you going?
To the store. இதில் வினைச் சொல், பேசுபொருள் எல்லாம் இல்லை.

கொஞ்சம் ஜம்ப் பண்ணிட்டேனா? கேள்விகளைத் தொடுங்கள் தொடருவோம்.

Sunday, June 17, 2007

தமிழ் பீட்டர் - ஆங்கிலம் பேச எழுத உதவி

பதிவர் ரவிசங்கரின் ஆலோசனைகளில் ஒன்றான ஆங்கில உதவிப் பகுதிக்கு இதன்மூலம் பீட்டர் சுழி போடப்படுகிறது. ஆங்கிலத்தில் பேசுவது எழுதுவது குறித்த கட்டுரைகள் இதில் வர இருக்கின்றன. மேலும் உங்கள் டவுட்டுக்கு பதில் கிடைக்கும். 'அண்ணே! ஆத்துதண்ணி இனிக்குது கடல் தண்ணி ஏண்ணே உப்பாயிருக்கு' - போன்ற கேள்விகளை விக்கி பசங்களிடம் கேழுங்க. இங்க ஒன்லி பீட்டர்ஸ்.

இந்த பதிவில் சேந்து செயலாற்ற விரும்பும் பீட்டர்கள் thamiz.help@gmail.com அல்லது cyril.alex @ gmail.com எனும் முகவரிக்கு ஆங்கிலத்தில் மடல் செய்யுங்க :)

பீட்டர் வுடுவோமா மாமே....